/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அன்னபூரணா பொறியியல் கல்லுாரி
/
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அன்னபூரணா பொறியியல் கல்லுாரி
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அன்னபூரணா பொறியியல் கல்லுாரி
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அன்னபூரணா பொறியியல் கல்லுாரி
ADDED : ஜூன் 15, 2025 02:07 AM
சேலம், சேலம், அன்னபூரணா பொறியியல் கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவுகளாக ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.
இதேபோல், முதுநிலை பாடப்பிரிவுகளாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது. 750க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களுடன், ஒன்பது கணினி ஆய்வக வசதியும், ஐ.சி., டூல்ஸ் கொண்ட, 10 ஸ்மார்ட் வகுப்பறைகளும், தடையில்லா அதிவேக இணையதள வசதி, அனைத்து வசதிகளும் கொண்ட இருபாலருக்குமான தனித்தனி விடுதி, மாணவர்களின் திறனை வெளிக்கொணர, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, கல்லுாரி துணைத்
தலைவர் சந்திரசேகர், முதல்வர் அன்புச்செழியன் கூறியதாவது: சர்வதேச தரத்தில் உயர்கல்வி அளிக்கும் எங்கள் கல்லுாரிக்கு, 'ஏ' கிரேடு தரச்சான்றிதழ், 'நாக்' கமிட்டி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆறு துறைகளுக்கு, தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது.
தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இக்கல்லுாரியில் படிக்கும், 95 சதவீத மாணவர்கள் உள்நாடு, பன்னாட்டு வேலை நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். உலகின் தலைச்சிறந்த மென் பொருள் நிறுவனங்களில் ஒன்றான, 'ஆப்பிள்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய, ஐந்து மாவட்டங்களில் முதல் முறையாக எங்கள் கல்லுாரியில் மட்டுமே உள்ளது. கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், 90 முதல், 95 சதவீத வேலைவாய்ப்புபெற்று, முன்னணி நிறுவனங்களில், 4.2 லட்சம் ரூபாய் முதல், 12.6 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுகின்றனர். பாடத்திட்டத்துடன், 2-3 மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சிகளும், 2 சான்றிதழ் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
சிறந்த கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை கொண்டு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்களைகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள்,
கருத்தரங்குகள் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.