/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டை
/
மலைப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டை
ADDED : டிச 09, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூனில், சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை, கரியகோவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில், டி.எஸ்.பி.,க்களான, மதுவிலக்கு பிரிவு சென்னகேசவன், வாழப்பாடி ஆனந்த், ஆத்துார் சதீஷ்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று காலை முதல், மதியம் வரை, கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில், 'ட்ரோன்' கேமராக்கள் மூலமும் சோதனை செய்தனர். ஆனால் சாராயம் எதுவும் பிடிபடவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.