/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அப்பா பைத்தியம் சுவாமி 25ம் ஆண்டு குரு பூஜை விழா
/
அப்பா பைத்தியம் சுவாமி 25ம் ஆண்டு குரு பூஜை விழா
ADDED : ஜன 28, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின், 25ம் ஆண்டு குருபூஜை விழா பிப்., 4ல் நடைபெற உள்ளது. அதிகாலை, 4:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, திருமகள் வழிபாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து விநாயகர், முருகன், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபி ேஷகம் நடந்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின், அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் அனைவரும், குரு பூஜை விழாவில் பங்கேற்று, குருவின் ஆசி பெற வேண்டும். இத்தகவலை, ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.