/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேற்கு மா.செ.,வாக நியமனம்; அன்புமணிக்கு எம்.எல்.ஏ., நன்றி
/
மேற்கு மா.செ.,வாக நியமனம்; அன்புமணிக்கு எம்.எல்.ஏ., நன்றி
மேற்கு மா.செ.,வாக நியமனம்; அன்புமணிக்கு எம்.எல்.ஏ., நன்றி
மேற்கு மா.செ.,வாக நியமனம்; அன்புமணிக்கு எம்.எல்.ஏ., நன்றி
ADDED : செப் 06, 2024 07:43 AM
மேட்டூர்: -பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், அக்கட்சி தலைவர் அன்புமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் அறிக்கை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், என்னை, சேலம் மேற்கு மாவட்ட செயலராக நியமித்தது பெருமை அளிக்கிறது. இதற்கு மாநில தலைவர் அன்புமணி, பசுமை தாயக தலைவர் சவுமியா, பா.ம.க., கவுரவ தலைவர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி ஆகியோருக்கு நன்றி.
மேற்கு மாவட்ட கட்சியினர், பா.ம.க., வளர்ச்சி குறித்து எப்போது வேண்டுமானாலும் பேச என்னை தொடர்புகொள்ளலாம். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைவர் அன்புமணியை முதல்வராக்க, இத்தருமணத்தில் உறுதிமொழி ஏற்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.நேற்று ஓமலுார், மேட்டூர், கொளத்துார் பகுதிகளுக்கு சென்ற எம்.எல்.ஏ., சதாசிவத்துக்கு, பா.ம.க., நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.