/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : மே 11, 2025 01:26 AM
சேலம், சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், வேலைவாய்ப்பு தினம், பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி அறக்கட்டளை செயலர் முனைவர் குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, சென்னையில் உள்ள அமெரிக்கன் மெகா ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் அரவிந்த் ஜெயபால், விப்ரோ நிறுவனத்தின், புது தொழில்நுட்பங்களை வழிநடத்தும் குழு தலைவர் திருநாவுக்கரசு, 'ப்ரோடாப்ட்' நிறுவன தலைமை மேலாளர் சந்திரமவுலி பங்கேற்றனர். பொறியியல், மேலாண் துறைகளில் இறுதி ஆண்டில் படிக்கும், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், ''நடப்பாண்டில், 90 சதவீதத்துக்கு மேல் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார். தொடர்ந்து முதல்வர் விசாகவேல், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன், அறக்கட்டளை பொருளாளர் சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் செங்கோட்டுவேல், மேலாண் துறை இயக்குனர் ஸ்டீபன், கல்லுாரி வேலைவாய்ப்பு ஆலோசகர் பாலச்சந்திரன் பேசினர். அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

