/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் 76 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
/
சேலத்தில் 76 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : நவ 28, 2024 06:41 AM
சேலம்: தமிழகம் முழுதும் புதிதாக, 2ம் நிலை காவலர்களாக, 3,359 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று வழங்-கினார். தொடர்ந்து அந்தந்த மாவட்ட எஸ்.பி., - கமிஷனர்கள், தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
அதன்படி சேலம் மாநகரில், 18 பேருக்கு பணி நிய-மன ஆணையை, மாநகர போலீஸ் கமிஷனர் உமா(பொ)
வழங்-கினார். அதேபோல், சேலம் மாவட்டத்தில், 58 பேருக்கு, பணி நியமன ஆணையை, எஸ்.பி., கவுதம் கோயல் வழங்கினார்.
இதில் ஆயு-தப்படைக்கு, 17 பேர், பட்டாலியனுக்கு, 38 பேர், தீயணைப்பு துறையினருக்கு 3 பேர் அடங்கும்.
இவர்களுக்கு வரும், 4 முதல், 7 மாத பயிற்சி நடக்க உள்ளது. அதற்கு பின், அவர்கள் பணிக்கு அனுப்பப்படுவர்.