/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு
/
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு
ADDED : அக் 01, 2024 01:44 AM
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு
அரசு கலைக்கல்லுாரியில் பாராட்டு
சேலம், அக். 1-
முதலமைச்சர் விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
சேலம் மாவட்ட அளவிலான, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி, கடந்த வாரம் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் அரசு கலைக்கல்லுாரியிலிருந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் கோகுலநம்பி ஒரு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கலம், கோகிலா இரண்டு வெள்ளி பதக்கம், ஹரிஷ் ஒரு வெள்ளி பதக்கம் வென்றனர். கால்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம், கூடைபந்து போட்டியில் வெண்கலம், கேரம்போர்டு போட்டியில் வெள்ளி, சிலம்ப போட்டியில் வெள்ளி, டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் என மொத்தம், 60 பேர் பதக்கம் வென்றனர். பரிசு வென்ற மாணவ, மாணவியருக்கு, நேற்று அரசு கலைக்கல்லுாரி முதல்வர் செண்பகவல்லி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.