/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
/
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஏப் 20, 2025 01:40 AM
இடைப்பாடி:
இடைப்பாடி அருகே செட்டிப்பட்டி, தேவூர் குறு வளமைய ஆசிரியர்கள் சார்பில், இந்த கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா செட்டிப்பட்டியில் நேற்று நடந்தது. தேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை மாரியம்மள் தலைமை வகித்தார்.
அதில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தனராஜ்(பொன்னம்பாளையம்), தங்கவேல்(புள்ளாகவுண்டம்பட்டி), ஜெயலட்சுமி(ஒக்கிலிபட்டி), மாரிகவுண்டன்காடு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி, கத்தேரி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை சரஸ்வதி ஆகியோருக்கு, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் கோகிலா, அன்பொளி ஆகியோர் சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர். செட்டிப்பட்டி, தேவூர் குறு வள மைய பகுதி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

