/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஓய்வு செயலருக்கு பாராட்டு விழா
/
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஓய்வு செயலருக்கு பாராட்டு விழா
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஓய்வு செயலருக்கு பாராட்டு விழா
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஓய்வு செயலருக்கு பாராட்டு விழா
ADDED : பிப் 02, 2025 01:38 AM
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஓய்வு செயலருக்கு பாராட்டு விழா
பனமரத்துப்பட்டி, : -மல்லுார், வடகாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலராக, 39 ஆண்டு பணிபுரிந்த குணசேகரன், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. முன்னாள் தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். அதில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், உறுப்பினர்கள், மக்கள், குணசேகரனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஓய்வு ஊதியமாக, 15 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.
மேலும் புது செயலராக சிவராஜ் பொறுப்பேற்றார். முன்னதாக, கூட்டுறவு சங்கத்தில் இருந்து குணசேகரனை, ஊர்வலமாக, மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்தபடி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பழனிசாமி, குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.