/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 19, 2024 01:31 AM
பனமரத்துப்பட்டி, டிச. 19-
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த, 17 மாணவ, மாணவியர், சேலத்தில் சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் பங்கேற்றனர். இரு நாட்கள், 7 நிகழ்ச்சிகளில், திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்
களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம், குரால்நத்தம் அரசுப்பள்ளிக்கு, புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியரின் பெற்றோர் வந்தனர். அவர்கள் முன்னிலையில், மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பள்ளி மேலாண் குழுவினர் பாராட்டினர்.
வட்டார வள மேற்பார்வையாளர் அசோக்ராஜா, ஒருங்கிணைப்பாளர் தெய்வநாயகம் உள்பட பலர்
பங்கேற்றனர்.