ADDED : மே 23, 2026 04:39 AM
மல்லசமுத்திரம்; நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மவுலிஸ், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 497 மதிப்பெண் பெற்று மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம், பள்ளியில் முதலிடம் பிடித்தார். யுவன்ராஜ், 496, கவிஸ்ரீ, 493 மதிப்பெண்கள் முறையே, 2, 3ம் இடங்களை பிடித்தனர். அறிவி-யலில், 9 பேர், கணிதம், சமூக அறிவியலில் தலா ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.
தேர்வு எழுதிய, 94 பேரும் வெற்றி பெற்றதால், 100 சதவீத தேர்ச்சியை பெற்றனர். 490 மதிப்-பெண்களுக்கு மேல், 6 பேர்; 475க்கு மேல், 24 பேர்; 450க்கு மேல், 39 பேர்; 400 மதிப்பெண்களுக்கு மேல், 69 மாணவர்கள் பெற்றனர்.
இவர்களை, பள்ளி தலைவர் ஆறுமுகம், தாளாளர் முத்துசாமி, செயலர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, இயக்குனர்கள் குழந்-தைவேல், சீனிவாசன், பழனிவேல், முதல்வர் இளமுருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்-டினர். மேலும் பிளஸ் 1 வகுப்பு அறிவியல், கலை பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. நீட் பயிற்சி வகுப்புக்கும் சேர்க்கை, விடுதி வசதி-யுடன் நடக்கிறது என, பள்ளி சார்பில் தெரிவிக்-கப்பட்டது.
