ADDED : செப் 24, 2024 07:36 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி பூ நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் அறுவடை செய்-யப்படும் அரளி, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
சேலத்தில் கடந்த, 14 ல், ஒரு கிலோ சாதா அரளி, 50 ரூபாய், வெள்ளை, மஞ்சள் தலா, 100 ரூபாய், செவ்வரளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது. 18, 19, 20ல், சாதா, 30 ரூபாய், மஞ்சள், செவ்வ-ரளி தலா, 100 ரூபாய், 21ல், சாதா, 25 ரூபாய், மஞ்சள், வெள்ளை தலா, 100 ரூபாய், 22 மற்றும் நேற்று சாதா, 20 ரூபாய், மஞ்சள், வெள்ளை தலா, 80 ரூபாய் என விலை சரிந்தது.பனமரத்துப்பட்டி அடிக்கரை அரளி விவசாயி ஏ.பி.,சிவகுமார், 48, கூறுகையில்,'' செடியிலிருந்து ஒரு கிலோ அரளி மொக்கு பறிக்க, 50 ரூபாய் கூலி கொடுக்கிறோம். விலை, 20 ரூபாய்க்கு சரிந்ததால்,
கிலோவுக்கு, 30 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. செடியில் பூ பறிக்காமல் விட்டால், அடுத்த பருவ மகசூல் பாதிக்கும். நஷ்டமானாலும் பரவாயில்லை என, கூலி கொடுத்து செடியிலிருந்து பூ பறிக்கிறோம்.
புரட்டாசியில் அரளி நுகர்வு குறைவாக உள்ளதால், விலை சரிந்துள்ளது. ஆயுத பூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னாடி விலை உயரும் என, எதிர்பார்க்-கிறோம்,'' என்றார்.