/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தவாரிக்கு கைலாசநாதரை அழைத்த அரங்கநாதர்
/
தீர்த்தவாரிக்கு கைலாசநாதரை அழைத்த அரங்கநாதர்
ADDED : பிப் 18, 2025 07:14 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி கடந்த, 13ல் தேரோட்டம் நிறைவடைந்து, தெப்ப தேரோட்டம் நேற்று முன்-தினம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதில் கோவிலில் இருந்து சோமாஸ்-கந்தர், உமாமகேஸ்வரி, ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் உட்பட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தொடங்கியது.
அங்கிருந்து ஊர்வலமாக பக்தர்கள் மஞ்சள் நீராடி போத்தனுார் பகுதிக்கு சென்றனர். தீர்த்தவாரிக்கு தங்கள் பகுதிக்கு வந்த சுவாமியை அழைத்து செல்ல, கோணகாபாடி மலையில் உள்ள ராதா, ருக்-மணி சமேத ஸ்ரீ காவெட்டி அரங்கநாதருடன் பக்தர்கள் அங்கு வந்தனர். அரங்கநாதருக்கு, கைலாசநாதர் கோவில் பூசாரி கும்ப மரியாதை வழங்கினார். தொடர்ந்து சுவாமிகள் அங்கிருந்து கோணகாபாடியில் உள்ள, சரபங்கா நதி அருகே அலங்கார மேடையில் எழுந்தருள செய்தனர். மாலையில் சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராள-மான பக்தர்கள் அரோகரா, கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்-தனர். இரவு 8.00 மணிக்கு மேல் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்-வரி உட்பட சுவாமியை அங்கிருந்து கோவிலுக்கு வழி அனுப்பி, அரங்கநாதர் தன் மலைக்கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி போத்தனுார், கோணகாபாடி, கொட்டாயூர், அத்திக்கட்டானுார், பவளத்தானுார் வழியாக இரவு முழுதும் ஊர்வலமாக வந்து அதிகாலை கோவிலை அடையும். அதை தொடர்ந்து, இன்று கோவிலில் கொடியிறக்கம் செய்து தைப்பூச திருவிழா நிறைவு பெறும்.