/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்தில் சுவாமி படம் வைத்து மகளிர் போலீசார் வழிபாடு?
/
மரத்தில் சுவாமி படம் வைத்து மகளிர் போலீசார் வழிபாடு?
மரத்தில் சுவாமி படம் வைத்து மகளிர் போலீசார் வழிபாடு?
மரத்தில் சுவாமி படம் வைத்து மகளிர் போலீசார் வழிபாடு?
ADDED : டிச 19, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள அரச மரத்தை, ஒரு மாதம் வரை கண்ணீர் அஞ்சலி பேனர் அடிக்கும் இடமாக மக்கள் பயன்படுத்தினர். இதை தடுக்க, வாழப்பாடி மகளிர் போலீசார், வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் இணைந்து, அரச மரத்துக்கு சேலை கட்டி, சுவாமி படம் வைத்து, மஞ்சள், குங்குமம் இட்டு நுாதன வழிபாடு செய்ததாக, படங்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து மகளிர் போலீசாரிடம் கேட்டபோது, 'இதை செய்தது யார் என விசாரிக்கப்படும்' என்றனர். அதேபோல் டவுன் பஞ்சா-யத்து சார்பிலும் செய்யவில்லை என்றனர். தேசிய நெடுஞ்சாலை, தமிழக நெடுஞ்சாலைத்துறையினரும் செய்யவில்லை என கூறினர்.