/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நத்தக்கரை சுங்கச்சாவடி கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் வாக்குவாதம்
/
நத்தக்கரை சுங்கச்சாவடி கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் வாக்குவாதம்
நத்தக்கரை சுங்கச்சாவடி கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் வாக்குவாதம்
நத்தக்கரை சுங்கச்சாவடி கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் வாக்குவாதம்
ADDED : மே 29, 2024 07:54 AM
தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரையில் உள்ள சுங்கச்சாவடி வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி இருபுறமும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளன. அதில் வடக்கு பகுதியில் உள்ள கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லாததால், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நேற்று சில வாகன ஓட்டிகள் கழிப்பிடத்துக்கு சென்றபோது தண்ணீர் இல்லை. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்கள், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறியதால், வாகன ஓட்டிகள் சென்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை. அடிப்படை வசதிகளை செய்த பின், சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்' என்றனர்.சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில், 'ஆழ்துளை குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் மின்மோட்டாரை இயக்கியதால் இரு நாட்களுக்கு முன் பழுதானது. சரிசெய்யும் பணி நடக்கிறது. இன்று(நேற்று) முதல், தினமும், 3 டேங்க் தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்' என்றனர்.