/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
37 நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு
/
37 நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு
ADDED : நவ 06, 2024 01:46 AM
37 நெல் கொள்முதல்
நிலையம் திறக்க ஏற்பாடு
ஈரோடு, நவ. 6-
ஈரோடு மாவட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில், நெல் கொள்முதல் செய்ய, 37 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. நாளைக்குள் அனைத்து இடங்களிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், மேவாணி, புதுக்கரைப்புதுார், சவுண்டப்பூர், நஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலுார், கருங்கரடு ஆகிய இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.
அறுவடை அடிப்படையில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். நல்ல, தரமான ஈரப்பதம், 17 சதவீதத்துக்குள் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்.
நெல் 'கிரேடு ஏ' ஒரு குவிண்டால் குறைந்தபட்ச ஆதார விலை, 2,320 ரூபாய், 130 ரூபாய் ஊக்கத்தொகை என, 2,450 ரூபாய்; பொது ரகம், ஆதார விலை, 2,300 ரூபாய், 105 ரூபாய் ஊக்கத்தொகை சேர்ந்து, 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும்.