/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.4.80 கோடியில் தேசிய தோட்டக்கலை திட்டத்துக்கு ஏற்பாடு
/
ரூ.4.80 கோடியில் தேசிய தோட்டக்கலை திட்டத்துக்கு ஏற்பாடு
ரூ.4.80 கோடியில் தேசிய தோட்டக்கலை திட்டத்துக்கு ஏற்பாடு
ரூ.4.80 கோடியில் தேசிய தோட்டக்கலை திட்டத்துக்கு ஏற்பாடு
ADDED : ஜூலை 13, 2025 01:51 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி, மிளகாய் போன்ற, வீரிய ஒட்டு ரக காய்கறி பரப்பை அதிகரிக்க, 1.25 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு, அத்தி, திசுவாழை போன்ற பல்வேறு வகை பழப்பயிர்களின் பரப்பை அதிகரிக்க, 46.56 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.மல்லிகை, செண்டுமல்லி போன்ற மலர்சாகுபடி பரப்பை அதிகரிக்க, 5.42 லட்சம் ரூபாய், மஞ்சள், இஞ்சி, மிளகு, கிராம்பு, கறிவேப்பிலை போன்ற சுவைதாளி பயிர்கள் பரப்பை அதிகரிக்க, 38.76 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பான சூழலில் பயிர் சாகுபடி செய்ய நிழல்வலை கூடாரம், பசுமைக்குடில் அமைத்தல், பசுமைக்குடிலில் ரோஸ், கார்னேசன், ஜெர்பரா சாகுபடி செய்யவும், நீரை சேமிக்க நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தல், நிரந்தர மண்புழு கூடாரம் அமைத்தல், பயிர்களின் மகரந்த சேர்க்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்க, தேனீ வளர்ப்பதை ஊக்கப்படுத்தல், அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்ல குளிரூட்டும் வாகனம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி போன்ற பல்வேறு திட்டக்கூறுகள் என, 4.80 கோடி ரூபாய் மதிப்பில் செயல்
படுத்தப்பட உள்ளது. விருப்ப
முள்ள விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்
கொண்டுள்ளார்.

