/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோல் சிகிச்சை, ஊனத்தடுப்பு முகாம் வரும் பிப்., 15 வரை நடத்த ஏற்பாடு
/
தோல் சிகிச்சை, ஊனத்தடுப்பு முகாம் வரும் பிப்., 15 வரை நடத்த ஏற்பாடு
தோல் சிகிச்சை, ஊனத்தடுப்பு முகாம் வரும் பிப்., 15 வரை நடத்த ஏற்பாடு
தோல் சிகிச்சை, ஊனத்தடுப்பு முகாம் வரும் பிப்., 15 வரை நடத்த ஏற்பாடு
ADDED : ஜன 31, 2025 02:52 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் பிப்., 15 வரை, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு இயக்கத்தில், பல்வேறு சிகிச்சை முகாம்கள் நடத்-தப்பட உள்ளன.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், தொழு நோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேர-ணியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஜன., 30 முதல், பிப்., 15 வரை, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு இயக்கமாக, சேலம் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், தோல் சிகிச்சை, ஊனத்தடுப்பு முகாம்கள், வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை பணி, விழிப்-புணர்வு கூட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. தொழுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம், உடலில் ஏற்படும் ஊனத்தை தவிர்க்க முடியும். இந்நோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்-களில், இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பேரணி, வள்ளுவர் சிலை வழியே, மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. திரளான கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பேரணி
கொளத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழுநோய் ஒழிப்பு தின பேரணி நடந்தது. சுகாதார நிலைய மருத்துவ அலு-வலர் விமலா தலைமை வகித்தார். அங்கு தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. இதில் மேற்பார்வையாளர் கண்ணன், சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள், கொளத்துார் போலீசார் பங்கேற்றனர். முன்னதாக மருத்துவர்கள், நோயா-ளிகள், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

