/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5.66 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட ஏற்பாடு
/
5.66 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட ஏற்பாடு
5.66 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட ஏற்பாடு
5.66 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட ஏற்பாடு
ADDED : டிச 30, 2025 01:26 AM
சேலம்: கால்நடைகளுக்கு, 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம், சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
சேலம், அய்யந்திருமாளிகை, மாரியம்மன் கோவில் திடலில், கால்நடைக்கு தடுப்பூசி போட்டு, கலெக்டர் பிருந்தாதேவி, முகாமை தொடங்கி வைத்தார்.
பின் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில், 6,11,161 பசுக்கள், 26,420 எருமைகள் உள்ளன. அதில் தடுப்பூசி போட தகுதியான, 5,47,638 பசுக்கள், 19,112 எருமைகள் என, 5,66,750 கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. 4 மாதங்களுக்கு மேற்பட்ட, ஆரோக்-கிய நிலையில் இருக்கும் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்-பூசி போடப்படும். 7 மாத சினையாக உள்ள கால்நடைகள் மட்டும் தவிர்க்கப்படும்.
அனைத்து கால்நடை மருந்தகங்கள் மூலம், அந்தந்த பகுதிகளில் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட நாட்களில் ஊராட்சி, பால் உற்பத்-தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஒத்துழைப்புடன் உரிய விளம்பரம், முன்னேற்பாடு செய்து, இலவசமாக தடுப்பூசி போட நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்து-வர்கள் தலைமையில், 150 பேர் அடங்கிய குழுக்கள் அமைத்து, ஜன., 28 வரை, முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

