/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் பாம்பை பிடித்தபின் பசு மீட்பு
/
கிணற்றில் பாம்பை பிடித்தபின் பசு மீட்பு
ADDED : டிச 30, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி. இவருக்கு சொந்தமான பசுமாடு, நேற்று, அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
அப்பகுதி விவசாயிகள் தகவல்படி, சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் வீரர்கள் வந்தனர். கிணற்றில் நல்ல பாம்பு இருப்பதை அறிந்தனர். இதனால் பசுவை பாதுகாப்பாக மீட்க, முதலில் பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

