தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரப்பர் ஷீட் திருடிய வழக்கு 10 ஆண்டுக்கு பின் கைது

ரப்பர் ஷீட் திருடிய வழக்கு 10 ஆண்டுக்கு பின் கைது

ரப்பர் ஷீட் திருடிய வழக்கு 10 ஆண்டுக்கு பின் கைது


ADDED : ஜூலை 10, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்ககிரி:கோவை, காரமடையில் இருந்து, சென்னைக்கு ரப்பர் ஷீட் ஏற்றிக்கொண்டு, 2010 ஜூலை, 17ல் லாரி சென்றுகொண்டிருந்தது. சேலம் மாவட்டம் சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடியில் உணவு சாப்பிட, டிரைவர், லாரியை நிறுத்தியிருந்தார்.

அப்போது கேரள மாநிலம், கோட்டயம், செனப்பாடி, புதுப்பரம்பில் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப், 40, உள்பட சிலர், லாரியில் இருந்த, 410 ரப்பர் ஷீட்டுகளை திருடினர். சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்த நிலையில், நீதிமன்றத்தில் முகமது ஷெரீப் ஆஜராகவில்லை.

நீதிமன்றம், 2016ல் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கேரளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், 10 ஆண்டுக்கு பின் நேற்று முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us