/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் பறித்தவரை கைது செய்! போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
பைக் பறித்தவரை கைது செய்! போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜூலை 10, 2025 01:30 AM
சங்ககிரி, சங்ககிரி அருகே அரசிராமணி, மணியன்காட்டில், கடந்த, 7 இரவு, கல், மண் அள்ளுவதாக கிடைத்த தகவலால், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள் அங்கு சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, வருவாய்த்துறையினர் பைக்குகளை அபகரித்ததாக, மறுநாள், தேவூர் ஆர்.ஐ., கனகராஜ், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் கந்தசாமியை கைது செய்ய வில்லை என கூறி நேற்று மாலை, தமிழ்நாடு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் சார்பில், தாலுகா துணைத்தலைவர் குப்புசாமி தலைமையில், 13 வி.ஏ.ஓ.,க்கள், தேவூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'கந்தசாமி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளியே வந்ததும் கைது செய்து விடுவோம்' என கூறினர். இதனால், வி.ஏ.ஓ.,க்கள் கலைந்தனர்.