/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு வெடித்தபோது தகராறு வீடு புகுந்து தாக்கிய 12 பேர் கைது
/
பட்டாசு வெடித்தபோது தகராறு வீடு புகுந்து தாக்கிய 12 பேர் கைது
பட்டாசு வெடித்தபோது தகராறு வீடு புகுந்து தாக்கிய 12 பேர் கைது
பட்டாசு வெடித்தபோது தகராறு வீடு புகுந்து தாக்கிய 12 பேர் கைது
ADDED : நவ 02, 2024 04:24 AM
சேலம்: சேலம் அடுத்த பெருமாபட்டி, பூசநாயக்கனுாரை சேர்ந்த சண்-முகம் மகன் சதிஷ்குமார், 38. இவருக்கு மனைவி தமிழரசி மற்றும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சதிஷ்குமார் போட்-டோகிராபராக பணிபுரிகிறார். இவரது அண்ணன் மகன் விஜய் கடந்த 31,
மதியம், 2:00 மணிக்கு அங்குள்ள பள்ளி மைதா-னத்தில் பட்டாசு வெடித்துள்ளார்.அப்போது, நாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசன், அவரது தம்பி பூவரசன் உள்ளிட்டோரும் பட்டாசு வெடித்தபோது, விஜயை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். அதனால், ஆத்-திரம் அடைந்த அவர், நடந்த சம்பவத்தை சித்தாப்பா சதிஷ்குமா-ரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், பண்டிகை நாளில் பிரச்னை எதுவும் வேண்டாம் என கூறி, அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் மதியம், 3:00 மணியளவில் கலையரசன் தலை-மையிலான ஏழு பேர் கும்பல், சதிஷ்குமார் வீட்டுக்கு சென்று, அவரிடம் தகராறு செய்து தாக்க முற்பட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்க, சதிஷ்குமாரை வீட்டுக்குள் இழுத்து கொண்டு, மனை-வியும், தாயும் சேர்ந்து, உள்பக்கமாக தாழிட்டு கொண்டனர். ஆத்-திரமடைந்த கும்பல், வீட்டின் கூரை மீது ஏறி, பலமாக மிதித்து, சிமென்ட் அட்டையை உடைத்து உள்ளே குதித்தனர்.
அங்கிருந்த கம்யூட்டர், 'டிவி' உள்ளிட்ட பொருட்களை உடைத்து நாசப்படுத்திவிட்டு, சதிஷ்குமார் உள்ளிட்ட குடும்பத்-தாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து வெளியே வந்தனர். தாக்குதல் சத்தம் கேட்டு, அவ்வழியாக காரில் வந்த அதே பகு-தியை சேர்ந்த ஜெயக்குமாரையும் அக்கும்பல் தாக்கி, கார் கண்-ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த ஜெயக்குமார், தடுத்த அவரது பக்-கத்து வீட்டை சேர்ந்த வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சதிஷ்-குமார் புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் விசாரித்து நந்த-குமார், 29, ஜீவானந்தம், 20, ரங்கநாதன், 20, சுரேஷ் கேசவன். 26, விமல், 27, பெருமாள் மகன் நந்தகுமார், 19, மணிகண்டன், 23, மற்றும் ஐந்து சிறுவர்கள் என மொத்தம், 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

