ADDED : நவ 09, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டையாம்பட்டி,
மருளையம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 50. நேற்று முன்தினம்,
'பேஷன் ப்ரோ' பைக்கை, வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில்
திருடுபோனது. நேற்று ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மாமாங்கத்தை சேர்ந்த தமிழ்மணி, 20, என்பவர்,
ஆட்டையாம்பட்டியில், காபி பார் பின்புற பகுதியில் சிறுநீர் கழிக்க
சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, 2,000
ரூபாயை பறித்துச்சென்றார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி வழக்கு
பதிந்து விசாரித்தபோது, ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோவில் வீதியை
சேர்ந்த ரவுடி சத்யராஜ், 31, என்பதும், பைக்கை திருடியதும், கத்தியை
காட்டி பணம் பறித்ததும், மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதும்
தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக், 500 ரூபாயை மீட்டனர்.

