/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வார்கள்' எஸ்.ஐ.ஆர்., குறித்து இ.பி.எஸ்., எச்சரிக்கை
/
'தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வார்கள்' எஸ்.ஐ.ஆர்., குறித்து இ.பி.எஸ்., எச்சரிக்கை
'தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வார்கள்' எஸ்.ஐ.ஆர்., குறித்து இ.பி.எஸ்., எச்சரிக்கை
'தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வார்கள்' எஸ்.ஐ.ஆர்., குறித்து இ.பி.எஸ்., எச்சரிக்கை
ADDED : நவ 09, 2025 05:00 AM
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுாரில் நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசியதாவது:
சேலம்
மாவட்டத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., தான் ஆட்சி செய்கிறது. சேலம்
அ.தி.மு.க., எஃகு கோட்டை. 2011ல் 100க்கு, 100 சதவீதம் வென்றோம். 2016ல்
வென்றோம், 2021ல், 11ல், 10 தொகுதிகளை வென்றோம். தமிழகத்தில் இரட்டை
இலக்கத்தில் வென்ற ஒரே மாவட்டம் சேலம்.
எஸ்.ஐ.ஆரை, தி.மு.க., கூட்டணி
எதிர்க்கிறது. இதை எதிர்ப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி ஒருபக்கம்
எதிர்த்து, ஒருபக்கம் வீடு வீடாக வந்து படிவத்தை கொடுக்கிறார்கள்.
அப்படி, பி.எல்.ஏ., -2 படிவத்தை கொடுக்க கூடாது. தேர்தல் அதிகாரி தான்
கொடுக்க வேண்டும். அதை முறையாக பார்க்கவேண்டும். இல்லையெனில்,
தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வார்கள்.
அடுத்தாண்டு நடக்கும்
தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று,
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். டெல்டாவில் குறுவை சாகுபடி
செய்த விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் மணிகள்
முளைத்துவிட்டன. நேரடியாக சென்று பார்த்தேன். விவசாயிகள் கண்ணீர்
விட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்டவே, 2026 தேர்தல். மக்களை காப்போம்.
தமிழகத்தை மீட்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், அமைப்பு செயலர் செம்மலை, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.பி., சந்திரசேகரன்,
முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் ஒன்றிய செயலர்கள்
ராஜேந்திரன், செந்தில்குமார், விமல்ராஜ், நகர செயலர் சரவணன்,
காடையாம்பட்டி ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்வரன், சுப்ரமணியம், நகர
செயலர் ஆனந்தகுமார், கருப்பூர் நகர செயலர் ஜீவா, தாரமங்கலம் ஒன்றிய
செயலர் மணிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

