ADDED : பிப் 08, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், கேசவேலு தெருவில் உள்ள எலக்ட்ரானிக், ஓட்டல் உள்பட, 3 கடைகளில் நேற்று முன்தினம், பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, ஒருவர் பூட்டை உடைத்தது
தெரியவந்தது. விசாரணையில் அவர், ஆத்துார், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமர்,
61, என தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.