/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.61 கோடி மோசடி செய்தவர் குண்டாஸில் கைது
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.61 கோடி மோசடி செய்தவர் குண்டாஸில் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.61 கோடி மோசடி செய்தவர் குண்டாஸில் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.61 கோடி மோசடி செய்தவர் குண்டாஸில் கைது
ADDED : பிப் 13, 2024 10:48 AM
சேலம்: காலியிடம் மற்றும் விவசாய நிலத்தின் மீது போலி உயில் தயாரித்து, கோடிக்
கணக்கில் பணம் பறித்த நபரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ராஜீலு தெருவை சேர்ந்தவர் மாணிக்க வாசகம், 58, இவர் நிலவாரப்பட்டியில் காலியிடம் மற்றும் திருச்சி மேக்கநாயக்கன்பட்டியில், 13 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவற்றை, அதன் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர் உயில் எழுதியதாக ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துள்ளார்.
மேலும் அவரது மகளிடம், நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி, 2019 முதல், 2023 வரை, 4.61 கோடி ரூபாய் பணம் பறித்துள்ளார்.
மேலும் ஒரு கோடி ரூபாய் தரவில்லை என்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். அப்பெண் கொடுத்த புகார் அடிப்படையில், மாணிக்கவாசகம் கைது செய்யப்பட்டார்.
இதே போல், பலரிடமும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் விஜய
குமாரி உத்தரவிட்டார்.