/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதைபொருள் ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி
/
போதைபொருள் ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி
ADDED : டிச 26, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், டிச. 26-
அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் போதைக்கு அடிமையானால் ஏற்படும் விளைவுகள் குறித்து, கலைக்குழுவினர் நடித்து காண்பித்தனர்.
தஞ்சாவூரை சேர்ந்த தேசத்தாய் கலைக்குழுவினரின், விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தியூர், தவிட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே போக்குவரத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நடந்தது. போதைபொருட்களால் ஏற்படும் பாதிப்பு, மதுவிற்கு அடிமையாகாமல் இருப்பது, போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, கலைக்குழுவினர் சார்பில், நடித்து காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர்.

