/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை
/
ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை
ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவாரத்தில், 100 ஏக்கரில் வலசக்கல்பட்டி ஏரி உள்ளது. அதன் மூலம், 730 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சில நாட்களாக பச்ச மலையில் பெய்த கன மழையால் வலசக்கல்பட்டி ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது.
தொடர்ந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பாசன விவசாயிகள், நேற்று, ஏரி பகுதியில், 'கிடா' வெட்டி பூஜை செய்தனர்.