/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளையூர் ஏரி நிரம்பியதால் பூக்கள் துாவி வழிபாடு
/
வெள்ளையூர் ஏரி நிரம்பியதால் பூக்கள் துாவி வழிபாடு
ADDED : டிச 31, 2024 07:38 AM
தலைவாசல்: வெள்ளையூர் ஏரி நிரம்பியதால், பாசன விவசாயிகள் பூக்கள் துாவி வழிபாடு செய்தனர்.
தலைவாசல் அருகே, வெள்ளையூர் கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம், 500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. சமீபத்தில் பெய்த மழையில், ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த ஏரி நேற்று முழுவதுமாக நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. பாசன விவசாயிகள், உபரி நீர் செல்லும் வழிப்பாதையில் பூக்கள், தானியங்கள் துாவி வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து, ஆத்துார் கோட்ட நீர் வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய தாலுகாவில், 51 ஏரிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையில், இன்று (நேற்று) வரை, 34 ஏரிகள் நிரம்பியுள்ளன. மூன்று ஏரிகள், 75 சதவீதம் நீர் நிரம்பியும், 25 முதல், 50 சதவீதம் வரை மூன்று ஏரிகள் உள்ளன. 11 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளன. அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடந்து வருகிறது. நிரம்பிய ஏரி பகுதிகளில், கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.