/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை அஸ்வின் ஸ்வீட்ஸில் 8 வகை 'கேக்' அறிமுக விழா
/
நாளை அஸ்வின் ஸ்வீட்ஸில் 8 வகை 'கேக்' அறிமுக விழா
ADDED : டிச 18, 2024 02:01 AM
சேலம், டிச. 18-
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சேலம் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில், 8 வகைகளில், புது கேக் அறிமுக விழா நாளை நடக்க உள்ளது. அதன்படி ரிச் பிளம், இங்கிலீஷ் ப்ரூட் பிளம், சாக்லேட் பாக்ஸ், டேட்ஸ் அண்ட் கேரட், பனானா, அஸோர் ட்டெட் நட்ஸ் பாக்ஸ், பாக்லா வைடின் பாக்ஸ், ஸ்வீட்டின் பாக்ஸ் ஆகிய, 8 புது வகை கேக் அறிமுக விழா, சேலம், ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், பட்டைக்கோவில், குகை கிளைகளில் நாளை நடக்க உள்ளது.
மேலும் செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டியூட்டி புரூட்டிச், பேரீச்சம்பழம் ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டை பொடி போன்றவற்றை கலந்து, ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் ஒயினில் ஊற வைக்கப்பட்டன. இந்த புரூட்ஸ் நன்றாக ஊறிய பின், சுவையான கேக் தயாரிக்கப்படும். தவிர முந்திரி, ஜெர்ரி, பேரீச்சம்பழம், திராட்சை, அத்திப்பழம், ரூட்டி ப்ரூட்டி, ஆரஞ்சு உள்ளிட்டவற்றை கொண்டு கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குக்கீஸ், சாக்லேட், புட்டிங் ஆகிய கேக்குகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.