/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டா கேட்டு காதில் பூ வைத்து போராட்டம்
/
பட்டா கேட்டு காதில் பூ வைத்து போராட்டம்
ADDED : செப் 27, 2025 01:26 AM
ஆத்துார், மா.கம்யூ., சார்பில், ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாலுகா செயலர் முருகேசன் தலைமை வகித்தார்.
அதில் ஆத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ் தொம்பை, பைத்துார், கல்லுக்கட்டு, காந்திபுரம்; தலைவாசல் தாலுகா பூமரத்துப்பட்டியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பல ஆண்டாக வீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கோஷம் எழுப்பினர்.
மேலும் வருவாய்த்துறையினர், மக்கள் காதில் பூ சுற்றுவதாக கூறி, மா.கம்யூ., கட்சியினர் உள்ளிட்ட மக்கள், காதுகளில் பூ வைத்துக்கொண்டனர். தொடர்ந்து வீட்டுமனை, பட்டா தொடர்பான மனுக்களை, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வழங்கினர்.