/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் வரும் 29ல் பெண் குழந்தைகளுக்கான 'அஸ்மிதா லீக்' சாம்பியன்ஷிப் தடகள போட்டி

ADDED : நவ 23, 2025 01:10 AM
சேலம், சேலம் மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறமையான பெண் தடகள வீராங்கனைகளை தேர்வு செய்கின்றனர், அவர்களுக்கு பயிற்சி அளிதது ஒலிம்பிக்கில் பங்கேற்க செய்யும் முயற்சியாக 'அஸ்மிதா லீக்' என்ற பெயரில் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 300 மாவட்டங்களில், சேலத்தில், வரும், 29ல் மரவனேரியில் உள்ள புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. 14 வயது மற்றும் 16 வயது என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்.
பெண் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இதில், 14 வயது குழந்தைகளுக்கு ட்ரையதலான் ஏ.பி.சி.மற்றும் கிட்ஸ் ஜாவேலின் என நான்கு போட்டிகளும், 16 வயது பிரிவில், 60 மீட்டர் முதல் 600 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எரிதல், குண்டு எரிதல், ஈட்டி எரிதல் என, 7 போட்டிகள் நடத்தப்படும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் nsrs.kheloindia.gov.in, sfw.kheloindia.gov.in அல்லது sdaa2016slm@gmail.com ஆகிய இணையதளங்களில் வரும் நவ. 27க்குள் முன்பதிவு செய்வது அவசியம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. முற்றிலும் இலவசம்.
இவ்வாறு கூறியுள்ளார்.