/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாகனம் மோதியதில் ஜோதிடர் பரிதாப பலி
/
வாகனம் மோதியதில் ஜோதிடர் பரிதாப பலி
ADDED : பிப் 04, 2025 06:37 AM
வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த களரம்பட்டியை சேர்ந்தவர் ஜோதிடர் கணபதி, 47. இவர் நேற்று முன்தினம் சேலம் சென்று விட்டு, நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு அவரது பஜாஜ் டிஸ்-கவர் பைக்கில் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். மேட்டுப்பட்டி டோல்கேட் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,
பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. படுகாயமடைந்த
அவரை, அப்ப-குதி மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்-சைக்கு அனுப்பினர். பரிசோதித்த
மருத்துவர்கள், வரும் வழியி-லேயே கணபதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கணபதி மனைவி கனகா, 42,
அளித்த புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.