/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரவில் எல்லை தாண்டும் குப்பை நிலவாரப்பட்டி மக்கள் குமுறல்
/
இரவில் எல்லை தாண்டும் குப்பை நிலவாரப்பட்டி மக்கள் குமுறல்
இரவில் எல்லை தாண்டும் குப்பை நிலவாரப்பட்டி மக்கள் குமுறல்
இரவில் எல்லை தாண்டும் குப்பை நிலவாரப்பட்டி மக்கள் குமுறல்
ADDED : நவ 16, 2024 01:35 AM
இரவில் எல்லை தாண்டும் குப்பை
நிலவாரப்பட்டி மக்கள் குமுறல்
பனமரத்துப்பட்டி, நவ. 16-
சேலம் மாநகராட்சி எல்லை அருகே, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி ஊராட்சி உள்ளது. அங்கு நெடுஞ்சாலை ஓரம் மயானம் அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளது.
சில நேரங்களில் குப்பை தீப்பிடித்து எரிந்து கரும்புகை நெடுஞ்சாலையில் பரவி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து நிலவாரப்பட்டி மக்கள் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் உள்ள தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள ஓட்டல், திருமண மண்டபம், பேக்கரி, இறைச்சி கடை கழிவு, குப்பை ஆகியவற்றை, தனிநபர்கள் நள்ளிரவில் வாகனத்தில் எடுத்து வந்து நிலவாரப்பட்டியில் கொட்டுகின்றனர். பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுவதால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'குப்பை கொட்ட கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்படும். அப்பகுதியில் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, குப்பை கொட்டுவோர், வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'
என்றனர்.