ADDED : ஆக 16, 2026 06:01 AM
ஆத்துார்:ஆத்துார்,
மஞ்சினி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,
தாமரைசெல்வி தலைமை வகித்தார். அதில் மக்கள், 'சீரான குடிநீர், சாக்கடை
துார் எடுத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என
வலியுறுத்தினர். பி.டி.ஓ., 'கோரிக்கைகள், மாவட்ட அதிகாரிகள்
கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்' என்றார்.
அதில்
பங்கேற்ற, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன்,
சார்பு நீதிபதி கணேசன், மாஜிஸ்திரேட் உதயசுந்தரம் ஆகியோரிடம்,
தன்னார்வ அமைப்பினர், வக்கீல் சங்கத்தினர், ஆத்துாரை தலைமையிடமாக
கொண்டு புது மாவட்டம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
அதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதியில் உள்ள கிராம
சபைகளில், ஆத்துார் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, தீர்மானம்
நிறைவேற்றினர்.
