ஜவுளி பூங்கா குறித்து பீதி ஏற்படும்படி தகவல் பரப்பக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
ஜவுளி பூங்கா குறித்து பீதி ஏற்படும்படி தகவல் பரப்பக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2026 06:01 AM
ஓமலுார்:ஓமலுார்,
வெள்ளக்கல்பட்டியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் இளம் பகவத் தலைமை வகித்தார். ஊராட்சி பணி, தீர்மானங்களை
ஊராட்சி செயலர் தயாளன் வாசித்தார். கிராம மக்கள் பலர், கோரிக்கை மனுக்களை
வழங்கினர்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது: வெள்ளக்கல்பட்டி
பிரிவு சாலையில், 'சிக்னல்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடைமேம்பாலம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி
முடிவெடுக்கப்படும்.
விண்ணப்பித்தவர்
களுக்கு குடிநீர்
இணைப்பு விரைந்து வழங்க அறிவுறுத்தி உள்ளேன். கிராம மக்கள், வரிகளை
விரைந்து செலுத்தினால், பல திட்டங்களை செயல்படுத்த
ஏதுவாக இருக்கும்.
குப்பையை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். சுடுகாட்டில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும். தெரு
விளக்கு
இல்லாத பகுதிகளில் விளக்கு பொருத்தப்படும். 150 நாள்
திட்டப்பணிகளில் பெண்களில் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்த
வாய்ப்பை பயன்
படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்,
'ஜவுளி பூங்கா குறித்து அரசு தெளிவான விபரங்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, 'ஒயிட் மற்றும் கிரீன்' தகுதிக்குட்பட்ட தரத்திலான பணிகள்
மட்டும் அங்கு அமையவுள்ளது. அதனால் ஜவுளி பூங்கா குறித்து மக்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தும்படி யாரும் தகவல் பரப்பக்கூடாது' என
எச்சரித்தார்.
நிறைவில் போதை பொருள் தடுப்பு மற்றும் எச்.ஐ.வி.,
தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சேலம் மேற்கு
தொகுதி, எம்.எல்.ஏ., லட்சுமணன், ஓமலுார் பி.டி.ஓ., உமாசங்கர்,
தாசில்தார் பார்த்தசாரதி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
'கல்குவாரி வேண்டாம்'
கெங்கவல்லி,
மண்மலை ஊராட்சி கிராம சபை கூட்டம், ஒன்றிய அலுவலர் ராஜ்கண்ணு
தலைமையில் நடந்தது. அதில் மொடக்குப்பட்டியில் மக்கள் தொடர்
போராட்டத்தால், 4 ஆண்டாக நிறுத்தி வைத்துள்ள கல்குவாரி, கிரஷர்
ஆலைகளுக்கு மீண்டும் எந்த அனுமதியும் வழங்கக்கூடாது; ஆலைகளுக்கு
ஏற்கனவே வழங்கிய திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; பில்லங்குளம்
ஏரியை சீரமைக்க வேண்டும்; கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என,
மனு வழங்கிய நிலையில், அவற்றை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
