ADDED : நவ 07, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏ.டி.எம்., சேதம்
வாலிபர் கைது
பனமரத்துப்பட்டி, நவ. 7-
மல்லுார் அருகே பாலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் உள்ள ஏ.டி.எம்., அறை கண்ணாடி, ஏ.டி.எம்., திரை கண்ணாடி, நேற்று முன்தினம் அதிகாலை கல்லால் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தன. அதேபோல் ஆட்டையாம்பட்டியில் உள்ள இரு ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. மல்லுார் போலீசார் விசாரணையில், பாலம்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்த கோபிநாத், 34, உடைத்தது தெரிந்தது. இதனால் அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.