/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்து தகராறில் தந்தை வெட்டி கொலை தாய் மீது தாக்கு; மகன் உட்பட மூவர் கைது
/
சொத்து தகராறில் தந்தை வெட்டி கொலை தாய் மீது தாக்கு; மகன் உட்பட மூவர் கைது
சொத்து தகராறில் தந்தை வெட்டி கொலை தாய் மீது தாக்கு; மகன் உட்பட மூவர் கைது
சொத்து தகராறில் தந்தை வெட்டி கொலை தாய் மீது தாக்கு; மகன் உட்பட மூவர் கைது
ADDED : பிப் 11, 2025 07:36 AM
ஓமலுார்: சொத்து கிரயம் செய்து கொடுக்காத தந்தையை,  கத்தியால் வெட்டி கொலை செய்த மகன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மணலுாரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 60, இவரது மனைவி கவுரம்மாள், 54.
இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பொன்னுசாமி, கவுரம்மாள் ஆகியோர் கடந்த இரு
ஆண்டுகளாக, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, வி.மேட்டூரில் உள்ள முனிரத்தினம்
என்பவருக்கு சொந்-தமான கல்குவாரியில் தங்கி, வாட்ச்மேன் வேலை செய்து வந்-துள்ளனர்.
பொன்னுசாமிக்கு, 80 சென்ட் நிலமும், கவுரம்மா-ளுக்கு, 1.5 ஏக்கர் நிலமும் உள்ளது.
பொன்னுசாமிக்குரிய நிலங்-களை, தனது மகன்களுக்கு வாய்மொழியாக பிரித்து கொடுத்துள்-ளதாக
தெரிகிறது.இதில் இரண்டாவது மகன் சின்னசாமி, 34, கொத்தனார். இவர், தனக்கு வீடு கட்டியதால் கடன்
அதிகமாக உள்ளதாகவும், அதனால் சொத்தை கிரயம் செய்து தரக்கோரி, அடிக்கடி தந்தை-யிடம்
தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பொன்னுசாமி கிரயம் செய்து தரவில்லை. இதனால்
ஆத்திரமடைந்த சின்னசாமி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பொம்மிடியை சேர்ந்த தனது
நண்பர்களான சீனிவாசன், அப்பு ஆகியோருடன், காடையாம்-பட்டி தாலுகா, வி.மேட்டூரில்
தங்கியிருந்த தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் தலை உள்ளிட்ட பல இடங்களில்
வெட்டியதால், சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி உயிரி-ழந்தார்.சத்தம் கேட்டு தடுக்க வந்த தாய் கவுரம்மாளையும் தலையில் தாக்கினர். இதையடுத்து மூவரும் தப்பி
சென்றனர். அருகில் உள்-ளவர்கள், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பலத்த
காயமடைந்த கவுரம்மாளை மீட்டு, சேலம் அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டு, சம்பவ இடத்தை
ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் ஆய்வு செய்தார்.தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், தலைமறைவான
சின்னசாமி உள்பட மூன்று பேரை பொம்மிடியில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்தனர்.
சொத்துக்காக தந்தையை கொலை செய்து, தாயையும் வெட்டியது அப்பகுதியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

