/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐக்கிய விவசாயிகள் சட்டநகல் எரிக்க முயற்சி
/
ஐக்கிய விவசாயிகள் சட்டநகல் எரிக்க முயற்சி
ADDED : டிச 24, 2024 02:08 AM
சேலம், டிச. 24-
சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், சட்டநகல் எரிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் சந்தைப்படுத்துதல் என்ற பெயரால் விவசாயத்தை நாசப்படுத்தும், சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசினார். தொடர்ந்து, வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கையை கைவிட கோரி, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவர்கள், சட்ட நகலை கிழித்து, எரிக்க முற்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சட்டநகலை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். நிர்வாகிகள் செல்வராஜ், தங்கவேல், சேகர், அய்யந்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.