/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நண்பரை கொல்ல முயற்சி: ஓட்டல் தொழிலாளி கைது
/
நண்பரை கொல்ல முயற்சி: ஓட்டல் தொழிலாளி கைது
ADDED : மே 10, 2024 07:33 AM
இடைப்பாடி : கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 55.
அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45, என்பவரும் பணிபுரிகிறார். நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு சந்தைப்பேட்டையில் மது அருந்தியபோது, சரவணன் தாய் குறித்து, ரமேஷ் பேசியுள்ளார். பின் இருவரும், ரமேஷின் மாமா மாதையன் வீட்டு வராண்டாவில் படுத்திருந்தனர். அப்போது தாய் குறித்து தவறாக பேசியதாக நினைத்த சரவணன், ரமேஷ் தலையில் கல்லை போட்டுள்ளார். படுகாயம் அடைந்த ரமேஷ், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொங்கணாபுரம் போலீசார் நேற்று சரவணனை கைது செய்தனர்.