/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?
/
சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?
ADDED : டிச 16, 2025 05:00 AM
சேலம்: சேலம் மத்திய சிறை ஜெயிலரை, கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மத்திய சிறையில் ஜெயிலராக இருப்பவர் ராஜேந்திரன், 59; இவர், டிச., 11ல் மதுரைக்கு சென்று விட்டு, இரவு, 12:00 மணியளவில் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அவரது பாதுகாப்பு காவலர் வெங்கடேஷ், டூ - வீலரில் ஏற்றிக்கொண்டு சிறைக்கு புறப்பட்டார்.
சிறிது துாரத்தில் பின் பக்கம் வந்த கார் ஒன்று, இவர்கள் மீது உரசி சென்றதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பள்ளப்பட்டி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜேந்திரன், போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காரில் வந்தவர்கள் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

