/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3வது டாஸ்மாக் கடை திறக்க மும்முரம்; கொந்தளித்த மக்கள் தர்ணா போராட்டம்
/
3வது டாஸ்மாக் கடை திறக்க மும்முரம்; கொந்தளித்த மக்கள் தர்ணா போராட்டம்
3வது டாஸ்மாக் கடை திறக்க மும்முரம்; கொந்தளித்த மக்கள் தர்ணா போராட்டம்
3வது டாஸ்மாக் கடை திறக்க மும்முரம்; கொந்தளித்த மக்கள் தர்ணா போராட்டம்
ADDED : டிச 16, 2025 07:53 AM

சேலம்: சேலம் எருமாபாளையம், ராமசாமி நகரை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் வசிப்பிடத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதன் நடுவே, இரு டாஸ்மாக் மதுக்கடைகள் ஒருசேர செயல்படுகின்றன. அதனால் எங்கள் பகுதி குடிகாரர்கள் வாழ்விடமாகவே மாறிவிட்டது. போதை ஆசாமிகள், இரவில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு செய்யும் ரகளையால், மக்கள் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர். பகலில் கூட நிம்மதியாக நடமாட முடியாத நிலை உள்ளது.
சில நேரங்களில், போதை தலைக்கேறி, அரைகுறை ஆடையுடன் உலா வந்து, களேபரம் செய்கின்றனர். இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம்-மக்கள் இடையே மோதல்போக்கு உண்டாகி, இரு தரப்பிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள கோவில் அருகே மூன்றாவதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இரு டாஸ்மாக் கடையால் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும், இன்னொரு கடையை திறந்தால், நிரந்தர பிரச்னையாகிவிடும். எனவே பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், கோவிலுக்கு செல்வோர் உள்பட அனைவரின் நலன் கருதி, டாஸ்மாக் கடை திறப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, கலெக்டர் அலுவலக நுழைவு முன், தரையில் அமர்ந்து, டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின், மனு அளித்து சென்றனர்.

