/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி ஏற்றி கொல்ல முயற்சி: இரு பெண்கள் அதிரடி கைது
/
லாரி ஏற்றி கொல்ல முயற்சி: இரு பெண்கள் அதிரடி கைது
ADDED : ஏப் 22, 2025 01:59 AM
ஆத்துார்:
ஆத்துார் அருகே, அம்மம்பாளையம், நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி அனிதா, 36, அதே தெருவை சேர்ந்த ரவி மனைவி அன்பரசி ஆகியோர் இடையே கடந்த, 19ல், தகராறு ஏற்பட்டது.
அதே நாளில் அன்பரசி மகன் பூபதிராஜாவுக்கு ஆதரவாக அவரது நண்பர் பாலமுருகன், லாரியை எடுத்து வந்து, அனிதா வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த கார் மீது மோதினார்.
அப்போது, லாரி தடுக்க முயன்ற பெண்கள் உள்ளிட்டோர் மீது, லாரியை வேகமாக ஏற்ற வந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
காயமடைந்த அனிதா அளித்த புகாரில், ரவி மனைவி அன்பரசி, மகன் பூபதிராஜா, உறவினர்கள் கதிரவன், பாலமுருகன், செல்வி ஆகிய ஐந்து பேர் மீது, கொலை முயற்சி, பொது சொத்து சேதம் உள்பட நான்கு பிரிவுகளில் ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், ரவி மனைவி அன்பரசி, 48, இவரது உறவினரான பாலன் மனைவி செல்வி, 40 ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை, போலீசார் தேடிவருகின்றனர்.