/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
/
சேலம் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சேலம் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சேலம் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
ADDED : மே 06, 2025 02:19 AM
சேலம்:
சேலம், அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் அயோத்தியாப்பட்டணத்தில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ல் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே இருந்த ஷட்டரின் பூட்டை, மர்ம நபர்கள் உடைக்க முயன்றனர். முடியாததால்
அங்கிருந்து சென்றுள்ளனர்.
புகார்படி, காரிப்பட்டி போலீசார் கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர், கடையின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரு மர்ம நபர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.