/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எல்லை சோதனை சாவடிகளை அகற்றக்கோரி 29ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
எல்லை சோதனை சாவடிகளை அகற்றக்கோரி 29ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
எல்லை சோதனை சாவடிகளை அகற்றக்கோரி 29ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
எல்லை சோதனை சாவடிகளை அகற்றக்கோரி 29ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2025 02:27 AM
நாமக்கல், '' 22 எல்லை சோதனை சாவடிகளை அகற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட,
10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, வரும், 29ல், சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழக தலைவர் தனராஜ் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 6.50 லட்சம் கனரக வாகனங்களும், 20 லட்சம் இலகு ரக வாகனங்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், டீசல், உதிரி பாகங்கள், டயர், 3-ம் நபர் காப்பீடு ஆகியவற்றின் அதிகப்படியான விலை உயர்வாலும், போதிய லோடு கிடைக்காததாலும், லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.
எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும், 29ல், சென்னை கும்மிடிபூண்டி சோதனை சாவடி அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதில்,
தமிழகத்தில் உள்ள, 22 எல்லை சோதனை சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து துறை மூலம் பதிவு சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை தபாலில் அனுப்பாமல், நேரில் வழங்க வேண்டும். கனரக வாகனங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்க குத்தகைதாரர்கள் என்ற போர்வையில் சுங்கம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
லாரி தொழில் மேம்பட, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பி, பறக்கும் படை அலுவலர்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியமர்த்த வேண்டும். 2021 சட்டசபை தேர்தலின்போது, டீசல் விலை லிட்டருக்கு, நான்கு ரூபாய் குறைக்கப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதியை, தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். இதில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால்,
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு
வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.