/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி சிதைத்த ஆட்டோ டிரைவர் மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகளும் கவலைக்-கிடம்
/
குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி சிதைத்த ஆட்டோ டிரைவர் மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகளும் கவலைக்-கிடம்
குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி சிதைத்த ஆட்டோ டிரைவர் மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகளும் கவலைக்-கிடம்
குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி சிதைத்த ஆட்டோ டிரைவர் மகன், மூத்த மகள் பலி; மனைவி, இளைய மகளும் கவலைக்-கிடம்
ADDED : பிப் 20, 2025 07:22 AM
ஆத்துார்: ஆட்டோ டிரைவரின் கள்ளத்தொடர்பு குறித்து மனைவி தட்டிக்-கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிரைவர், அரிவாளால், மனைவி, மகன், இரு மகள்களை, கண்மூ-டித்தனமாக வெட்டி சிதைத்தார். இதில் மகன், மூத்த மகள் உயிரி-ழந்த நிலையில், மனைவி, இளைய மகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 45; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தவமணி, 38. இவர்களது மகள்கள் விஜயதா-ரணி, 13, அருள்பிரகாஷினி, 10, மகன் அருள்பிரகாஷ், 6. இவர்கள் முறையே, 8, 5, 1ம் வகுப்பு படித்தனர்.
அசோக்குமார், கடலுார் மாவட்டம் நெய்வேலியில் வாட-கைக்கு ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த, 17ல், சொந்த ஊர் வந்த-போது மனமுடைந்து காணப்பட்டார். விஷம் குடித்து தற்கொலை செய்வதாக கூறிய நிலையில், மனைவி, உறவினர்கள் தடுத்துள்-ளனர். அதே நாள் நெய்வேலி சென்ற அவர், நேற்று முன்தினம் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். அப்போது நெய்வேலியில் வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளது குறித்து, கணவரிடம் மனைவி கேட்டுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டி-ருந்த மனைவி, மகன், மகள்களை மர்ம நபர்கள் வெட்டிச்சென்ற-தாக, ரத்த காயங்களுடன் வந்து, அசோக்குமார், அப்பகுதி மக்க-ளிடம் தெரிவித்தார். உறவினர்கள், மக்கள், அவரது வீட்டில் சென்று பார்த்தபோது, விஜயதாரணி, அருள்பிரகாஷ் இறந்து கிடந்தனர். தவமணி, அருள்பிரகாஷினி ரத்த வெள்ளத்தில் உயி-ருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இருவரையும் மக்கள் மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பப்பட்டனர்.
அதேநேரம் வீடு அருகே தோட்டத்தில் லேசான காயத்துடன் கிடந்த அசோக்குமாரை, கெங்கவல்லி போலீசார் மீட்டு, கெங்க-வல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்த-போது, 'சொத்து பிரச்னை உள்ளது. இந்நிலையில் மனைவி, குழந்தைகளை மர்ம நபர்கள் வெட்டிச்சென்றனர். எனக்கு மயக்க-மாக உள்ளது' என கூறினார். இவரது பேச்சில் போலீசாருக்கு சந்-தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் போலீசார், காலை, 9:30 மணிக்கு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்-தனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். 'லில்லி' மோப்ப நாய், வீடு அருகே சிறிது துாரம் ஓடி நின்றது. தொடர்ந்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் ஆத்துார், தலை-வாசல், வீரகனுார், தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவம-னையில் அசோக்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில் மனைவி, குழந்தை-களை அரிவாளால் வெட்டியதை, அவரே ஒப்புக்கொண்டார். கெங்கவல்லி போலீசார், கொலை வழக்கு பதிந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அசோக்குமார், நெய்வேலியில் திருமணமான, 45 வயது பெண்-ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அறிந்து அப்-பெண்ணின் தம்பி கண்டித்துள்ளார். சில நாட்களுக்கு முன், நெய்-வேலி என்.எல்.சி., சுற்றுச்சுவரில் இருந்த இரும்பு கதவை, அசோக்குமார் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அதை, தொடர்பு வைத்துள்ள பெண்ணின் தம்பி வீடியோ எடுத்துக்கொண்டு, திரு-டியதாக போலீசில் புகார் அளித்து விடுவேன் என மிரட்டி-யுள்ளார்.
இந்நிலையில் கடந்த, 17ல் சொந்த ஊர் வந்த அசோக்குமார், அவரது அண்ணன் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். அவர், மிரட்டிய நபரிடம் பேசியுள்ளார். அப்போது அவரது அக்காவுடன், 'அசோக்-குமார் பேசமாட்டார்' என கூறியுள்ளார். பின் நெய்வேலி சென்று திரும்பிய நிலையில், திருட்டு பிரச்னையுடன் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்து மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் அதிக அளவில் மது அருந்திய அசோக்குமார், மனை-வியுடன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அதிகாலையில் துாங்-கிக்கொண்டிருந்த மனைவி, குழந்தைகளை, கண்மூடித்தனமாக கொடூர முறையில் வெட்டியுள்ளார். கொலையை மறைக்க, மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடியுள்ளார். விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சிகிச்சைக்கு பின், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.