/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறைக்கு விருது
/
விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறைக்கு விருது
ADDED : நவ 11, 2024 07:08 AM
சேலம் : இந்திய அவசரகால மருத்துவ சங்கம்(எஸ்.இ.எம்.ஐ.,), நாட்டில் அவசரகால சுகாதார தரங்களை மேம்படுத்தல், அவசரகால மருத்துவ துறை சார்ந்த கல்வி, அறிவியல் செயல்பாடுகளை மேம்படுத்தல், அதுசார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படும் அமைப்பு. இந்த அமைப்பு சார்பில், அவசரகால மருத்துவ சிகிச்சை சார்ந்த சர்வதேச கருத்தரங்கு, சென்னையில் நடந்தது.
அதில் விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட, 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறை டீன் செந்தில்குமார், அவசரகால மருத்துவ சிகிச்சை பிரிவின் வளர்ச்சி சார்ந்து, சர்வதேச வல்லுனர்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லுாரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் அவசரகால மருத்துவ சிகிச்சை பிரிவின் பாடநெறிகள், மருத்துவ பயிற்சிகள், கட்டமைப்பு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்டவை அடிப்படையில், 'இந்தியாவின் அவசரகால மருத்துவ சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர்களுக்கான மிகவும் நம்பகமான மதிப்புமிக்க நிறுவனம்' என்ற விருது, சங்கம் மூலம் வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.இதற்கு சிறந்த பங்களிப்பாற்றிய டீனுக்கு, பல்கலை வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா, பேராசியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.