/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் நான்கு தலைமை ஆசிரியர்களுக்கு விருது
/
சேலத்தில் நான்கு தலைமை ஆசிரியர்களுக்கு விருது
ADDED : மார் 05, 2024 01:58 AM
சேலம்;சேலம் மாவட்டத்தில், சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறுவர்களை, பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
அதன்படி, அழகப்பம்பாளையம் புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, டி.பெருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி ஆகியோர் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பிரிவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தொடக்க, நடுநிலைப்பள்ளி பிரிவில், கன்னங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, வாழப்பாடி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சகீராபானு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நாளை நடைபெற உள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத்தொகை தலா, 10 லட்சம் ரூபாய் மற்றும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட உள்ளது.

