/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
ADDED : ஜன 22, 2024 10:47 AM
சேலம்: விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, இந்தியாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கல்விக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
'குளோபல் ட்ரையம்ப்' அறக்கட்டளை, ஆராய்ச்சி, கல்வி போன்ற பல துறைகளில் நுண்ணறிவு சார்ந்த விபரங்களை வழங்கும் ஓர் முன்னணி உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனம். இது ஆண்டுதோறும் கல்வியல் சார்ந்த மாநாட்டை நடத்தி, அதில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழா பெங்களூரில் நடந்தது. அதற்கு துறை டீன் செந்தில்குமார், கவுரவ விருந்தினராக அழைக்கப்பட்டு பேசினார். அதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள், வல்லுனர்கள் பங்கேற்றனர்.
இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்தியாவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்விக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனம் எனும் விருது, கேன்டிலா மருந்தியல் நிறுவனத்தின் முன்னாள் டி.ஆர்.டி.டி., விஞ்ஞானி பிரபாகரனால் வழங்கப்பட்டது. இதை துறை டீன் பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்த விருது பெற்றதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய, துறை டீனை கவுரவிக்கும்படி, 'தி பிசினஸ் அசன்ட்' பத்திரிகை, செந்தில்குமார் குறிப்புரையை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்ததற்கு, துறையின் டீனுக்கு, பல்கலை வேந்தர் கணேசன், துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.